Thursday, June 20, 2024
Home » தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் தேர்வு

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் தேர்வு

by Ranjith

 

தர்மபுரி, ஏப்.5: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவருக்கான தேர்தல், திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் ஒன்றியத்தின் புதிய மாநில தலைவராக தண்டபாணி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் அடங்கிய 2024ம் ஆண்டிற்கான நாட்குறிப்பேடு வெளியிடும் நிகழ்ச்சி, தர்மபுரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சிவகுமார், பொருளாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றியத்தின் தர்மபுரி மாவட்ட தலைவர் குமார் வரவேற்றார். மாநில தலைவர் தண்டபாணி, 2024ம் ஆண்டிற்கான நாட் குறிப்பேட்டினை வெளியிட்டார். இந்த கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகளான மகேந்திரன், கோவர்த்தன், மாதேஸ்வரன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் மாணிக்கம் மற்றும் மணி, முன்னாள் துணை பொதுச்செயலாளர் மாதப்பன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

You may also like

Leave a Comment

9 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi