கோவை, ஜன.9: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம், பிரதம் மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டம் ஆகிய திட்டங்களுக்கு சிறப்பு முகாம்கள் இன்று (9ம் தேதி) முதல் வரும் 13ம் தேதி வரை நடைபெறும். இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் சார்பில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம், பிரதம் மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டம், சுய உதவிக்குழுக்கள் உருவாக்குதல், சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் புதிய தொழில் தொடங்க கடனுதவிகள் ஆகிய திட்டங்களுக்கான சிறப்பு முகாம்கள் கீழ்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.
அதன் விவரம்: தொண்டாமுத்தூர் – குனியமுத்தூர் பகுதிகளில் 87ம் வார்டு பகுதிகளில் இன்று (9ம் தேதி) மற்றும் நாளை (10ம் தேதி) நடைபெறும். 88வது வார்டில் 11ம் தேதியும், 93வது வார்டில் 12ம் தேதியும், 89வது வார்டில் 13ம் தேதியும் நடைபெறும். கிணத்துக்கடவு பேரூராட்சி 12,13,14,15வது வார்டு பகுதியில் இன்று (9ம் தேதி) நடைபெறும். 6,7,8,9,10வது வார்டுளில் நாளை (10ம் தேதி) நடைபெறும். 1,2,3,4,5வது வார்டுகளில் வரும் 11ம் தேதியும், சோளம்பாளையத்தில் வரும் 13ம் தேதியும், வடபுதூரில் வரும் 13ம் தேதி முகாம்கள் நடைபெறவுள்ளன.
அதேபோல, சூலூர் பேரூராட்சியில் 4,5,6,7வது வார்டுகளில் இன்று (9ம் தேதி) நடைபெறும். வார்டு 1,2,3,8,9ல் நாளையும் (10ம் தேதியும்), வார்டு 10,11,12,13,14,15,16,17,18ல் வரும் 11ம் தேதியும் நடைபெறும். பொள்ளாச்சி நகராட்சியில் வார்டு 1,2,3ல் நாளை (10ம் தேதி) நடைபெறும். வார்டு 29,30,33ல் 11ம் தேதியும், வார்டு 20,21,25ல் 12ம் தேதியும் நடைபெறும். வால்பாறை ஆனைமலை பேரூராட்சி பகுதிகளில் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை முகாம்கள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.