புதுக்கோட்டை,ஆக.5: தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் சிறுபான்மையினர் நல கூட்டமைப்பு பிரதிநிதிகள் சார்பில் மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டேயிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறுபான்மை மக்கள் குறித்து கடந்த சில தினங்களாக அவதூறான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சிறுபான்மை மக்களை சாத்தானிய பிள்ளைகள் என்று பேசுவதோடு தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார். தமிழகத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என அனைவரும் மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் போது தேவையில்லாத சமூகப் பகையை ஏற்படுத்தும் வகையில் சீமானின் பேச்சு உள்ளது. அவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.