நாகப்பட்டினம், மார்ச் 6: தமிழகத்தின் கடலோர பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒன்றிய அரசின் ஏல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என முக்குலத்துப்புலிகள் கட்சி நிறுவன தலைவர் ஆறுசரவணத்தேவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தின் கடலோர பகுதிகளில் குறிப்பாக மன்னார் வளைகுடா பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒன்றிய அரசு ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக கடலோர பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடவேண்டும்
0