பெரம்பலூர்,ஆக.27:பெரம்பலூர் நகராட்சி, முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நேற்று(26ம் தேதி) தமிழக ஆசிரியர் கூட்டணி வரு வாய் மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்தல் நடைபெ ற்றது. இந்த நிர்வாகிகள் தேர்வு கூட்டத்திற்கு மாவ ட்டத் தலைவர் இளைய ராஜா தலைமைவகித்தார். மாவட்டச் செயலாளர் ராஜ் குமார், பொருளாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் ஆணையாளராக அரிய லூர் கல்வி மாவட்ட செய லாளர் கருணாநிதி தேர் தல் ஆணையாளராகவும், தேர்தல் இணை ஆணை யராக செந்துறை கல்வி மாவட்ட செயலாளர் ராம நாதன் ஆகியோர் பணி யாற்றினர்.ஐபெட்டோ அகில இந்திய பொதுச் செயலாளர் வா. அண்ணாமலை, மாநில தலைவர் நம்பிராஜ் ஆகி யோர் சிறப்பு பார்வையாள ர்களாகக் கலந்து கொண்ட னர்.
இந்த தேர்தலில் தமி ழக ஆசிரியர் கூட்டணியின் பெரம்பலூர் மாவட்டத் தலைவராக செல்வராஜ், மாவட்ட செயலாளராக துரைராஜ், மாவட்ட பொரு ளாளராக செல்வதுரை, மாவட்ட மகளிரணி செய லாளராக அமிர்தம், தலை மை நிலைய செயலாளராக துரைராஜ், மாவட்ட துணை தலைவர்களாக சீனி வாசன், மாலாரோஸ்லின், மாவட்ட துணை செயலாள ர்களாக சந்திரகுமார், அகிலா, தணிக்கைகுழு உறுப்பினராக முருகேசன், தங்கதுரை ஆகியோர் தேர் ந்தெடுக்கப்பட்டனர்.பின்னர் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு ஐபெட்டோ பொதுச் செயலாளர் அண்ணாமலை சான்றிதழ் வழங்கிபாராட்டி பேசினார். இதில் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.