வேதாரண்யம்,ஆக.19: வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கண்ணையன் ஒரு பள்ளியில் தேசியபசுமை படை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவருக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருது ரூ.1 லட்சம் வழங்கி உள்ளது. இந்த விருதினை நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ், ஆசிரியர் கண்னையனுக்கு ரூ.1 லட்சம் வழங்கியிருந்தார். இந்த விருதுதொகை ரூ.1 லட்சத்தை தான் பணியாற்றும் தோப்புத்துறை அரசு மாதிரி பள்ளியின் பசுமை திட்டத்திற்கு ஆசிரியர் கண்ணையன் தலைமையாசிரியர் கவி நிலவனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். விருது தொகையை ரூ.1 லட்சம் பள்ளிக்கு வழங்கிய ஆசிரியர் கண்ணையனை பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளி மேலாண்மை குழுவினர் சக ஆசிரியர்கள் பாராட்டினர்.