செய்யாறு, ஜூன் 7: செய்யாறில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏ ஒ.ஜோதி ஆகியோர் நேற்று மாலை பொது மக்களுக்கிடையே வழங்கினார்கள். செய்யாறு சட்டமன்ற தொகுதி சார்பில் செய்யாறு பேருந்து நிலையம் மற்றும் ஆற்காடு சாலையில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்பி, செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி ஆகியோர் பொதுமக்களுக்கு திமுக அரசின் 4ஆண்டு சாதனைகள் விளக்கத் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
முன்னதாக செய்யாறு சட்டமன்ற தொகுதியில் உள்ள 13 தேர்தல் ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஆலோசனை கூட்டத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், நகர செயலாளர் விஸ்வநாதன், நகர மன்ற தலைவர் மோகனவேல், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் பாபு, ஒன்றிய செயலாளர்கள் சங்கர், சீனிவாசன், தினகரன், ஞானவேல், ரவிக்குமார், திராவிட முருகன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன், மாவட்ட நிர்வாகிகள் சம்பத், ராம்ரவி, புரிசை சிவகுமார் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.