நாமகிரிப்பேட்டை, ஜூலை 5: நாமகிரிப்பேட்டை பேரூர் இளைஞர் அணி சார்பில், தமிழக அரசின் நான்காண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் அன்பழகன் வரவேற்றார். பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட தலைமை கழக பேச்சாளர்கள் பூலாவரி ஜெயவேல், நந்தகுமார் ஆகியோர் தமிழக அரசின் நான்காண்டு சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறினர். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி கலந்து கொண்டு பேசுகையில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ரூ.854 கோடி மதிப்பீட்டில் புதிதாக கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கான நிதி வழங்கி, தற்போது அனைத்து பகுதிகளுக்கும் வெள்ளோட்டம் நடைபெற்று வருகிறது. விரைவில் அனைவருக்கும் 24 மணி நேரமும் சித்திரைப்பு செய்யப்பட்ட சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும் எனவும், அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பொதுமக்களிடம் எடுத்து கூற வேண்டும்,’ எ்ன்றார். இக்கூட்டத்தில், பேரூராட்சி மன்ற தலைவர் சேரன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மூர்த்தி, முருகதாஸ், மணிக்குமார், குமரேசன், மணிகண்டன், முல்லை பூங்கொடி, நெல்லை தனசேகரன், ரவீந்திரன், சந்திரா, நல்லம்மாள், மாதேஸ்வரி, சாந்தி, வாசுதேவன், தீபா, லதா ரத்தினம், கனகவல்லி, தமிழ்ச்செல்வி மற்றும் நிர்வாகிகள் பாபு, அய்யாக்கண்ணு, மோகனசுந்தரம், ராமலிங்கம், பழனிவேல், இளங்கோ, மகாலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
0
previous post