வேலூர், ஜூன் 5: ஊரக வளர்ச்சித்துறையில் தமிழகம் முழுவதும் 57 பணி மேற்பார்வையாளர்கள் (ஓவர்சீயர்கள்) அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஊராட்சி ஒன்றியம் கு.லோசினி செங்கல்பட்டு மாவட்டத்துக்கும், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் காருணன் செல்வாநிஷாந்தன், கடலூர் மாவட்டத்துக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் வி.பாபு, விழுப்புரம் மாவட்டத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவரது பணியிடத்துக்கு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து எஸ்.சவுந்தர் மாறுதலாகி பொறுப்பேற்கிறார்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியம் எஸ்.ரகுபதி, திருவண்ணாமலை மாவட்டத்துக்கும், திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் மு.சரண்யா, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கும், இங்கு பணியில் இருந்த எஸ்.கிருஷ்ணவேணி, திண்டுக்கல் மாவட்டத்துக்கும், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் எஸ்.தமிழ்செல்வி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் உ.மனோஜ், மதுரை மாவட்டத்துக்கும், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம் எஸ்.தமிழரசன், திண்டுக்கல் மாவட்டத்துக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் வி.மகேந்திரன், விருதுநகர் மாவட்டத்துக்கும், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஏ.ஞானப்பிரகாசி, தென்காசி மாவட்டத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஊராட்சி ஒன்றியம் மு.புஷ்பா, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியாற்றி வரும் பி.சதீஷ், விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஊராட்சி ஒன்றியத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் மா.வள்ளிமயில், கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கும், இங்கு பணியில் இருக்கும் ஏ.பிரீத்தி, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட மாநிலம் முழுவதும் 57 பணியிட மேற்பார்வையாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் பொன்னையா பிறப்பித்துள்ளார்.