Tuesday, September 17, 2024
Home » தமிழகத்தில் 17%க்கு பதில் 19% வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதலுக்கு ஒன்றிய அரசு அனுமதி தரும் என தகவல்

தமிழகத்தில் 17%க்கு பதில் 19% வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதலுக்கு ஒன்றிய அரசு அனுமதி தரும் என தகவல்

by kannappan

சென்னை: தமிழகத்தில் 17 சதவீதத்துக்கு பதில் 19 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதலுக்கு ஒன்றிய அரசு அனுமதி தரும் என தகவல் வெளியாகியுள்ளது. கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான ஈரப்பத வரம்பு மேலும் ஓரிரு விழுக்காடுகள் அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது. பருவம் தவறி பெய்த மழையால் டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதலின் ஈரப்பத அளவை உயர்த்துமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். பின்னர் நெல்லின் ஈரப்பத வரம்பு குறித்து ஒன்றிய அரசின் குழுவினர், டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தனர். இந்நிலையில் தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் 17 சதவீதத்துக்கு பதில் 19 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதலுக்கு ஒன்றிய அரசு அனுமதி தரும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய குழு அறிக்கை அடிப்படையில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான ஈரப்பத வரம்பை மேலும் 1 – 2 சதவீதம் அதிகரிக்க அதிகாரிகள் அரசுக்கு புரிந்துள்ளனர். எனவே நெல் கொள்முதல் ஈரப்பத வரம்பு 1 – 2 சதவீதம் உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், நெல்லில் 19 சதவீதம் வரை ஈரப்பதம் அனுமதிக்கப்பட்ட நிலையில் 20 – 21 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. மழையால் நெற்பயிர்கள் நனைந்தால் ஈரப்பத வரம்பை 22 சதவீதமாக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். …

You may also like

Leave a Comment

seventeen + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi