பெரம்பலூர், மே 30: பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் (TANFINET) மூலம் தமிழகத்தில் அதிவேக இணையதள சேவை திட்டத்தினை செயல்படுத்த தகுதி வாய்ந்த தனி நபர் / நிறுவனங்களிடமிருந்து (Franchisee Partners) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;
தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட “பாரத் நெட்” (Bharat Net) திட்டத்தின் கீழ் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் (TANFINET) மூலம் தமிழகத்தில் அதிவேக இணையதள சேவை வழங்கப்படவுள்ளது. அதன் முதல் கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 66 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் இணையதள சேவை வழங்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தினை செயல் படுத்த தகுதி வாய்ந்த தனிநபர், நிறுவனங்களிடமிருந்து (Franchisee Partners) விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. விண்ணப்பங்களை < https://tanfinet.in.gov.in/ >.
இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள டான்ஃபினெட் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலரை 98420 90551 என்ற செல்போன் எண் மூலமாகவும், களப்பொறியாளரை 86751 94202 என்ற அலைபேசி எண் மூலமாகவும், இணையதள பொறியாளர் (TANFINET) அவர்களை 82486 11149 என்ற அலைபேசி எண் மூலமாகவும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.