Friday, March 1, 2024
Home » தமிழகத்திற்கு பேரிடர் நிதியாக ரூ.20 ஆயிரம் கோடி கோரி ஆர்ப்பாட்டம்

தமிழகத்திற்கு பேரிடர் நிதியாக ரூ.20 ஆயிரம் கோடி கோரி ஆர்ப்பாட்டம்

by Ranjith

மதுரை, டிச. 29: தமிழ்நாட்டை பாதித்த கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தாக்கத்தை தேசிய ேபரிடராக அறிவித்து, ஒன்றிய ரூ.20 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மூவேந்தர் புலிப்படை அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அண்ணா பேருந்து நிலையம் அருகே திருவள்ளுவர் சிலை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் செ.பாஸ்கர் தலைமை வகித்தார்.

மாநில செயலாளர் தனபாண்டியன், மதுரை மாவட்ட செயலாளர் தியாகு, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பார்த்திபன், மதுரை நகர செயலாளர் மணிகண்டன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் காசிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு அமைப்புகளில் நிர்வாகிகளான ஷெரிப், திருமுருகன் காந்தி, நாகை திருவள்ளுவன், குடந்தை அரசன், பாண்டியன், கனியமுதன், ராஜ்குமார், பொன் முருகேசன், வையவன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். சிவகங்கை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மலைராஜ் நன்றி கூறினார்.

You may also like

Leave a Comment

nineteen − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi