தர்மபுரி, நவ.29: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 11ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தர்மபுரி மேற்கு மாவட்ட தமாகா சார்பில், நேற்று பஸ் ஸ்டாண்ட் காமராஜர் சிலை அருகே கொடியேற்று விழா நடந்தது. தர்மபுரி மேற்கு மாவட்ட தலைவர் புகழ், கட்சி கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நகர தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில நிர்வாகி புவனேஸ்வரன், இளைஞரணி தலைவர் நவீன், மாவட்ட செயலாளர் பாபு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமாகா 11ம் ஆண்டு தொடக்க விழா
0