தக்கலை, நவ.21: முளகுமூடு தபால் நிலையத்தில் சிறுசேமிப்பு முகவராக கூனிமாவிளையை சேர்ந்த ஜோஸ்பின் கிறிஸ்டி (54) என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சிறுசேமிப்பு பணத்தை மோசடி செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து தக்கலை கோட்ட அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் வசந்த சிந்து தேவி ஆய்வு மேற்கொண்டார். இதில் சிறுசேமிப்பு பணம் a77 ஆயிரம் ேமாசடி நடைபெற்றதையும், அஞ்சலக முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளதையும் கண்டு பிடித்தார். இதையடுத்து அவர் தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜோஸ்பின் கிறிஸ்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தபால் நிலைய சிறு சேமிப்பு பணம் மோசடி: முகவர் மீது வழக்கு
0
previous post