Wednesday, February 21, 2024
Home » தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவரை காதலித்ததால் ஆத்திரம் மாநகராட்சி உதவி பொறியாளரின் மகளை மிரட்டி நிர்வாண புகைப்படங்களை பெற்ற மாஜி காதலன்: தனிமையில் நெருக்கமாக எடுத்த புகைப்படம், வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதும் அம்பலம்

தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவரை காதலித்ததால் ஆத்திரம் மாநகராட்சி உதவி பொறியாளரின் மகளை மிரட்டி நிர்வாண புகைப்படங்களை பெற்ற மாஜி காதலன்: தனிமையில் நெருக்கமாக எடுத்த புகைப்படம், வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதும் அம்பலம்

by Karthik Yash

சென்னை, ஜன.12: சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் ஒருவரின் மகளை மிரட்டி, அவரது நிர்வாண புகைப்படங்களை பெற்ற முன்னாள் காதலனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவனை காதலிப்பதால் அவரை பழிவாங்க, இருவரும் தனிமையில் இருந்த வீடியோவை அனுப்பி சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்று மிரட்டி வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சென்னை தரமணி பகுதியை சேர்ந்தவர் ராணி (44, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்று அளித்தார்.

அதில், நான் சென்னை மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறேன். எனது மகள் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். எனது மகள், கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்தபோது, உடன் படித்த சூர்யா என்பவர், எனது மகளுடன் பழகி வந்துள்ளார். இவர், கடந்த 5ம் தேதி எனது மகளுடன் செல்போனில் பேசியபோது, எனது மகளின் நிர்வாண புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் பெற்றுள்ளார். அதை தற்போது சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி வருகிறார். எனவே சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று புகார் அளித்தார்.

இதையடுத்து கோட்டூர்புரம் உதவி கமிஷனர் உத்தரவுப்படி சிறப்பு எஸ்ஐ செந்தில்குமார் தலைமையில் சூர்யாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு மதுரவாயல் பகுதியில் இருந்த சூர்யாவை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: மாநகராட்சி உதவி பொறியாளர் மகளுடன் சூர்யா பள்ளியில் படித்தபோது இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு சூர்யாவும், உதவி பொறியாளரின் மகளும் தனிமையில் இருந்த போது, இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சூர்யா தனது செல்போனில் எடுத்து வைத்திருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சூர்யாவுக்கும், அவரது காதலிக்கும் இடையே ஏற்பட்ட கறுத்து வேறுபாடு காரணமாக, சூர்யாவை விட்டு அவர் பிரிந்துவிட்டார். இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளாக சிதம்பரத்தில் தங்கி படித்து வரும் உதவி பொறியாளரின் மகள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அவருடன் படித்து வரும் கமல் என்ற மாணவனை காதலித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் காதலனான சூர்யாவுக்கு தெரியவந்தது. உடனே சூர்யா கடந்த 5ம் தேதி போன் செய்து பேச முயன்றுள்ளார். ஆனால் கல்லூரி மாணவி சூர்யாவின் போனை எடுக்கவில்லை. பிறகு அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு, இருவரும் ஒன்றாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பி, இதை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன், என்று சூர்யா மிரட்டியுள்ளார்.

அதை பார்த்து அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி, ஒரு கட்டத்தில் சூர்யாவுக்கு போன் செய்து பேசியுள்ளார். அப்போது சூர்யா வீடியோவை வெளியிட கூடாது என்றால், உன்னுடைய நிர்வாண புகைப்படங்களை எனக்கு அனுப்ப வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத கல்லூரி மாணவி, அச்சத்தில் தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை சூர்யாவுக்கு அனுப்பியுள்ளார். மேலும், இதுகுறித்து தனது பெற்றோரிடமும் கூறி அழுதுள்ளார். அதன் பிறகு தான் கல்லூரி மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தது தெரியவந்தது.

இருவரும் சிறு வயது முதல் ஒரு பள்ளியில் படித்து வந்தவர்கள் என்பதாலும், மகளின் எதிர்காலத்தை கருத்தி கொண்டும், இனி கல்லூரி மாணவியை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று இரு வீட்டார் பெற்றோர் முன்னிலையில் சூர்யாவிடம் எழுதி வாங்கிக்கொண்டு போலீசார் கடுமையாக எச்சரித்து மீண்டும் விசாரணைக்கு வருமாறு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், கல்லூரி மாணவியுடன் ஒன்றாக இருந்த வீடியோ, புகைப்படங்கள் வைத்திருந்த ஐ-போன் ஒன்றையும் சூர்யாவிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் பெற்றோர், மகளை மீரட்டி நிர்வாண புகைப்படம் பெற்ற சூர்யா மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

17 − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi