சேலம், ஜூன் 2: சேலம் மாவட்டம், சங்ககிரி தாமஸ் காலனியை சேர்ந்தவர் சத்யராஜ் மகன் சந்து (24). இவர் சங்ககிரியில் உள்ள தனியார் ரப்பர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 29ம் தேதி காலை, வேலைக்கு சென்ற சந்து, மாலையில் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் காணவில்லை. இதுபற்றி சங்ககிரி போலீசார் அவரது தந்தை சத்யராஜ் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கடந்த 29ம் தேதி தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்த சந்து, கம்பெனி வேலையாக அலுவலக பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். பிறகு மதியம் கம்பெனிக்கு வந்து, முன்பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அதன்பின் மீண்டும் திரும்பி வரவில்லை எனத் தெரியவந்துள்ளது. மாயமான சந்துவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.