தூத்துக்குடி, ஆக.18: தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (37). தனியார் ஏற்றுமதி நிறுவன ஊழியரான இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த சுடலைமுத்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த தென்பாகம் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.