நாகப்பட்டினம், ஜூன் 25: நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த தனியார் துறை காலிப்பணியிடங்களை பிரத்யேக இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் வேலைநாடுநர்களுக்கான பிரத்யேக இணையதளமான முகவரியில் (Private Job Portal) https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் நிறுவன விவரங்களை பதிவு செய்யவும்.
தங்களது காலிப்பணியிட விவரங்களை அவ்வப்போது அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த வேலைநாடுநர்கள் தங்களது கல்வி விவரங்களை பதிவு செய்து தனியார்துறை நிறுவனங்களில் அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பித்து வேலைவாய்ப்பை பெற்று கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.