ராஜபாளையம், மே 28: ராஜபாளையம் தனியார் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் ரூ.12.35 லட்சம் கையாடல் செய்த புகாரில் அலுவலக பணியாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராஜபாளையம் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் அலுவலக பணியாளராக ேவலை பார்த்து வந்தவர் ராம்சிங். இவர் கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியை கடந்த 2023 ஜூன் முதல் 2024 ஜனவரி வரை காசோலைகளில் போலி கையெழுத்திட்டு ரூ.12.35 லட்சம் வரை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கல்லூரி நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி ராம்சிங் மீது போலி ஆவணங்களை தயாரித்தல், ஏமாற்றுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் அசோக்பாபு தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.