கிருஷ்ணகிரி, ஆக.23: கிருஷ்ணகிரி அடுத்த மகராஜகடை அருகே, நலகொண்டளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மோகன் (35). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது டெலிகிராம் பக்கத்திற்கு கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி குறுந்தகவல் வந்தது. அதில், பகுதி நேர பணி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், அதில் கொடுத்திருந்த நம்பரை தொடர்பு கொண்டு பேசியபோது, சிலவற்றிற்காக பணத்தை செலுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கொடுத்த லிங்கில் சென்று, அதன் மூலம் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு சிறிது சிறிதாக மொத்தம் ₹12 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை மோகன் அனுப்பி வைத்தார். அதன் பின்னர் அந்த நம்பரை தொடர்பு கொள்ள முடியவில்லை. லிங்கும் வேலை செய்யவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், இதுபற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் ஊழியரிடம் ₹12.19 லட்சம் மோசடி
previous post