ஈரோடு,ஜூன்23: அரசின் பல்வேறு திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளின் அனைத்து விவரங்களையும் சேகரித்திட வேளாண் அடுக்ககத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது,விவசாயிகளுக்கு தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் ஏற்படுத்திட விவசாயிகளின் நில உடமை,ஆதார் எண்,செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை விடுபடலின்றி இணைத்திடும் பணி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் நடைபெற்று வருகிறது.எனவே, விவசாயிகள் தாங்கள் ஏற்கனவே பெற்று வரும் பல்வேறு அரசுத் திட்டங்களை எதிர்காலத்தில் எளிதில் பெற்றிட இந்த தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியமாகும்.எனவே, விவசாயிகள் தங்களது விவரங்களை அந்தந்தப் பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களிலோ அல்லது பொது இ-சேவை மையங்களின் மூலமாகவோ வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறுமாறு உழவர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.