திருச்சி, ஆக.19: திருச்சி புத்தூர் தெற்கு முத்துராஜா தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலன் (73) தையல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் ரமேஷ் (43) இவர் தனது தந்தையிடம் ₹.500 தரும்படி கேட்டு உள்ளார். அதற்கு அவர் தர மறுக்கவே, ரமேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இதுகுறித்து பாலன் உறையூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து ரமேஷை கைது செய்தனர்.