பென்னாகரம், மே 15: பென்னாகரம் அருகே உள்ள நாகனூரை சேர்ந்தவர் முருகேசன்(62), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை, தனது 2 மகன்களுக்கும் சரிசமமாக பிரித்து கொடுத்து விட்டு, 1 ஏக்கர் நிலத்தை மட்டும் தனக்கு வைத்துக்கொண்டு அதில் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில், அவரது மூத்த மகன் அருண்குமார்(27), தனது தந்தையின் 1 ஏக்கர் நிலத்தை, தனக்கு எழுதித் தருமாறு, கடந்த மாதம் 29ம் தேதி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து முருகேசன், பென்னாகரம் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், புகாரை வாபஸ் பெறக்கோரி நேற்று முன்தினம் இரவு, அருண்குமார் குடிபோதையில் வந்து முருகேசனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இதுகுறித்து முருகேசன் பென்னாகரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தந்தையை தாக்கிய மகன் அதிரடி கைது
0
previous post