தர்மபுரி, அக்.26: தர்மபுரி சோளக்கொட்டாய் அடுத்த ஜம்புகாளான்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் அதே பகுதியில் சிமெண்ட் கடை வைத்துள்ளார். மேலும், ஹாலோ பிளாக் கற்கள் விற்பனையும் செய்து வருகிறார். இவருக்கு மலர் என்ற மனைவியும், ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மகன் கார்த்திக்ராஜா(24), தந்தைக்கு உதவியாக கடையை கவனித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 11 மாதங்களுக்கு முன், கார்த்திக்ராஜா பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக, இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அது தீர்த்தகிரிக்கு பிடிக்காததால் அவ்வப்போது மகனுக்கும், தந்தைக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மீண்டும் கார்த்திக்ராஜாவுக்கும், தீர்த்தகிரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கார்த்திக்ராஜா அங்கிருந்த கட்டையால், தீர்த்தகிரியை சரமாரி தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி மலர் கொடுத்த புகாரின் பேரில், மதிகோண்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்ராஜாவை கைது செய்தனர்.
தந்தையை கட்டையால் தாக்கிய மகன் கைது
95
previous post