இடைப்பாடி, நவ.19: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு செக்கானூர், பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிகோட்டை ஆகிய நீர்மின் கதவணை வழியாக பவானி, திருச்சி மற்றும் டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது. நீர்மீன் கதவணையில், மின்உற்பத்திக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. நெரிஞ்சிபேட்டை நீர்மின் கதவணை நிலையம் வழியாக, விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறப்பதால் நீர்மின் கதவணைகளில் செல்லும் பகுதிகள் நீரில் மூழ்கியிருந்த மணல் திட்டுகள், பாறைகள் வெளியே தென்படுகிறது. தண்ணீர் குறைவாக செல்வதால், மீனவர்கள் காவிரி கரையோரம் முகாமிட்டு மீன்களை பிடித்து வருகின்றனர். மேலும், மீன்களை இரையாக்கி கொள்வதற்காக நாரைகள், நீர்க்காகங்கள் கரையோரத்தில் குவிந்துள்ளன.
தண்ணீர் குறைவாக செல்வதால் வெளியே தெரியும் பாறைகள்
0