Thursday, September 19, 2024
Home » தண்ணீரை பாதுகாக்கலாம்!

தண்ணீரை பாதுகாக்கலாம்!

by kannappan

நன்றி குங்குமம் தோழிவாசகர் பகுதி   *கோடைகாலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் தண்ணீரை சிக்கனமாக நாம் உபயோகிக்க வேண்டும்.* தண்ணீரைப் பிடித்து வைத்து பாத்திரங்கள் கழுவினால் தேவை குறையும்.* துணிகளைத் துவைக்கும்போதும், துணிகளை அலசும்போதும் குழாய் தண்ணீரை திறந்துவிட்டுக்கொண்டே செய்யாமல் அளவோடு பிடித்து அலசிய பிறகு அந்த நீரை கழிவறை சுத்தம் செய்யவோ, செடிகளுக்கோ பயன்படுத்தலாம்.* வாஷிங் மிஷினில் துவைக்கும் போது, தண்ணீர் அதிகம் செலவாகும். முடிந்த வரை கைகளால் துணிகளை துவைக்கலாம். அல்லது தண்ணீரின் அளவைக் குறைத்து மிஷினை ஓடவிடுங்கள்.* செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சும்போது, பைப்பை பிடித்தபடி நிற்காமல், ஒரு வாளியில் பிடித்து தெளித்துவிட்டால் தண்ணீர் மிச்சமாகும்.* பல் துலக்கும்போது வாஷ்பேஷின் குழாயைத் திறந்துவிட்டுக்கொண்டே பல் துலக்கினால் தண்ணீர் நிறைய வீணாகும். அதைத் தவிர்த்து ஒரு கப்பில் பிடித்து பல் துலக்கலாம். குழந்தைகளுக்கும் இந்தப் பழக்கத்தை கற்றுக்கொடுக்கலாம்.*ஷவரில் ஒருவர் குளிக்க நிறைய தண்ணீர் செலவாகும். அதனால் பக்கெட்டில் பிடித்து குளித்தால் குறைவாக செலவாகும். * ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைத்து நிலத்தடி நீரை காப்பாற்றலாம்.* நீர் சொட்டிக்கொண்டே இருக்கும் பழைய பைப்புகளை உடனே மாற்ற வேண்டும்.– கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.உங்கள் கண்களை கவனியுங்கள்* கண்கள் குளிர்ச்சி பெற பசு நெய் சாப்பிடவும்.* புளியம்பூவை அரைத்து கண்களைச்சுற்றி பற்று போட்டால் கண்வலி தீரும்.* கண்வலி, கண் அரிப்பு நீங்க வில்வ மரத்தின் தளிர் இலைகளை நன்றாக வதக்கி கண்ணை மூடிக்கொண்டு அதன்மேல் ஒத்தடம் கொடுக்கலாம். * கண் எரிச்சல் நீங்க அடிக்கடி அரைக்கீரை சாப்பிடவும். *தினமும் பப்பாளிப்பழம் சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் சரியாகும்.* கண் பார்வை தெளிவடைய பச்சைப் பொன்னாங்கண்ணி இலையை காலையில் மென்று தின்றுவிட்டு பால் பருகிவர கண் பார்வை தெளிவடையும்.*கண் எரிச்சல், நீர் வடிதல் பிரச்னைக்கு நாவல்பழம் சாப்பிடலாம். * கண் ஒளி புத்துணர்ச்சி பெற தூதுவளைக்காய், தூதுவளை வத்தல் சாப்பிடலாம். * கண்கள் சிவப்பாக மாறிவிட்டதை குணமாக்க புளியமரத்தின் இலையை ஒரு மெல்லிய துணியில் வைத்து கண்களின் மேல் வைத்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து எடுத்தால் குணமாகும்.* கண் பார்வை கூர்மை அடைய தான்றிக்காய் தோலை உரித்து பொடி செய்து கால் கரண்டி தேனில் குழைத்து சாப்பிடலாம். – நீலாமணி கோவிந்தராஜன், பள்ளிக்கரணை.

You may also like

Leave a Comment

15 − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi