ஒட்டன்சத்திரம், மே 15: ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள புதுசத்திரம் அண்ணா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (51). பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் இரவு மதுவில் தண்ணீர் கலப்பதற்கு பதிலாக தின்னர் கலந்து குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்ணீருக்கு பதிலாக மதுவில் தின்னர் கலந்து குடித்த பெயிண்டர் சாவு: ஒட்டன்சத்திரம் அருகே விபரீதம்
0
previous post