Friday, June 9, 2023
Home » தண்ணீருக்குள்ளும் யோகா செய்யலாம்!

தண்ணீருக்குள்ளும் யோகா செய்யலாம்!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் உடலுக்கும், உள்ளத்துக்கும் ஓய்வளித்து, ஏராளமான நன்மைகளைத் தரும் யோகா பயிற்சி உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்றுள்ளது. அந்த யோகா பயிற்சிகளை தரையில் மட்டும்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. தண்ணீருக்குள்ளும் செய்யலாம். Aqua yoga என்று சொல்லப்படும் இந்த பயிற்சியானது தற்போதைய ஃபிட்னஸ் உலகின் புதிய டிரெண்டாக இருக்கிறது.தண்ணீருக்குள் யோகாவா என்று வியப்பாக இருக்கிறதா?! நீருக்கடியில் யோகா செய்வது, நிலத்தில் செய்வதை விட எளிதாக இருக்குமாம். ஏனென்றால், நீரில் நம் உடல் எடை குறைந்த மிதக்கும் உணர்வைக் கொடுக்கிறது. இதனால் மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களில் அடிபட்டவர்கள் கூட மூட்டு இணைப்புகளில் அதிக அழுத்தம் கொடுக்காமல் இன்னும் எளிதாக செய்ய முடியும் என்று இதனை பெருமையாக சொல்கிறார்கள். நீருக்கடியில் செய்வதற்கென்று சில எளிமையான யோகாசனங்களும் இருக்கின்றன. Upward Salute என்ற தடாசனா, Dynamic chair என்ற உத்கடாசனா, Dancer’s pose என்ற நடராஜாசனா, Floating upward bow என்ற ஊர்த்வ தனுராசனா போன்றவை இதில் பிரபலமானவை. இதன் பயன்களும் அபாரமானவை என்கிறார்கள் யோகா நிபுணர்கள். உதாரணத்துக்கு, Dancer’s pose பயிற்சியைப் பார்ப்போம். இதில் உடல் எடை முழுவதையும் வலது காலில் இறக்கி வலது காலை நன்றாக ஊன்றிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு, இடது காலை மெதுவாக பின்புறமாக தூக்கி, இடது கையால் பிடித்துக் கொள்ள வேண்டும். வலது கையை வலது தோள்பட்டைக்கு நேராக மேலே உயர்த்தி ஒற்றைக்காலில் நிற்க வேண்டும். இதேபோல் மறுபுறம், இடது காலை தரையில் ஊன்றி வலது காலை தூக்கி நிற்க வேண்டும். இந்த ஆசனத்தை செய்யும்போது, உடலுக்கு சமநிலை கிடைக்கிறது. பின்புறம், தொடை மற்றும் இடுப்பு தசைகள் நெகிழ்ச்சியும், உறுதியும் பெறுகின்றன என்கிறார்கள். அக்வா யோகா செய்து முடிக்கும்போது Floating corpse என்ற சவாசனா பயிற்சியுடன் நிறைவு செய்ய வேண்டும். ஏனெனில், இறுதியில் சவாசனம் செய்யாமல் எந்த யோகாசனப் பயிற்சிகளும் முற்றுப் பெறாது.இருக்கிற தண்ணீர் பஞ்சத்தில், குடிப்பதற்கே அல்லாடும்போது யோகா எங்கே செய்வது என்று மனதுக்குள் ஓடுகிறதா?! நவீன ஃபிட்னஸ் உலகில் இப்படியெல்லாம் புது மேட்டர் இருக்கிறது என்று மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஸ்பெஷல் நியூஸ்!தொகுப்பு: உஷா நாராயணன்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi