பல்லடம், ஆக. 26: பல்லடம் அருகே பொங்கலூரில் பிஏபி வாய்க்கால் தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது பற்றி தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் செய்து காட்டினர்.பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் 2ம் மண்டல பாசனத்திற்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது உடுமலையில் இருந்து திருப்பூர் மாவட்டம் பொங்கலூர், காங்கயம், வெள்ளகோவில் மற்றும் குருக்கத்தி வரை செல்கிறது.
தண்ணீர் திறந்துவிடும்போது குளிப்பதற்காக வருபவர்கள் மற்றும் துணி துவைக்கும் பெண்கள் உள்பட பலர் இதில் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தண்ணீரில் விழுந்தவர்களை காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்த செயல் விளக்கத்தினை தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர்.