செம்பனார்கோயில், ஜூன் 30: நம் முன்னோர்கள் தென்னங்கீற்றுகளால் ஆன குடிசை வீடுகளில் தான் வசித்து வந்தனர். இதனால் சீதோஸ்ன நிலைக்கேற்ப உடல் ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வரும் மக்கள், கோடைக்காலங்களில் சரியான காற்றோட்ட வசதி இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதனால் தென்னங்கீற்றுகளின் பயன்பாடு குறைந்து, இந்த தொழிலில் ஈடுபடுவோர் மாற்று தொழிலை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.