சாத்தான்குளம், ஜூலை 1: தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் மிக்கேல் பிரேம்குமார். இவர், இதே ஊரில் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருவதுடன் பால் பண்ணைக்கு பால் சேகரித்துக் கொடுக்கும் ஊழியராகவும் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நித்யா (34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. மிக்கேல் பிரேம்குமார், நிலம் வாங்குவது தொடர்பாக கடன் வாங்கியதாக தெரிகிறது. இதில் பிரச்னை ஏற்பட்டதால் நித்யா கணவரை கண்டித்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனமுடைந்த நித்யா, கடந்த 25ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த நித்யா, ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நித்யாவின் தாயார் உசுரத்துக்குடியிருப்பு வாசுகி (60) தட்டார்மடம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அனிதா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
தட்டார்மடம் அருகே தீக்குளித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி சாவு
0