குமாரபாளையம், செப்.1: தொழில்நுட்ப கல்வித்துறையின் தட்டச்சு தேர்வில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 425 பேர் அதிகம் பங்கேற்று தேர்வு எழுதினர். தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வித்துறையின் தட்டச்சு தேர்வு, குமாரபாளையம் ராகவேந்திரா கல்லூரி மையத்தில் நடைபெற்றது. நேற்றும், இன்றும் நடைபெறும் இளநிலை முதுநிலை தட்டச்சுத்தேர்வுகளில் நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 34 தட்டச்சு பயிற்சி பள்ளிகளை சேர்ந்த 345 மாணவர்களும், 1403 மாணவிகளும் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் பங்கேற்றவர்களை விட, இந்த ஆண்டு 425 மாணவ மாணவிகள் அதிகம் பங்கேற்றுள்ளனர். தேர்வின் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து, தேர்வை தொடங்கி வைத்து கண்காணித்தார்.
தட்டச்சு தேர்வை 1748 பேர் எழுதினர்
previous post