கிருஷ்ணகிரி, செப்.1: கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த முதல் நாள் தட்டச்சு தேர்வில் 680 பேர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், தமிழ், ஆங்கிலம், உயர்வேகம், சிறுவர்கள் என நான்கு பிரிவுகளில் இரு நாட்கள் நடக்கும் தட்டச்சு தேர்வுகள் நேற்று தொடங்கியது. இத்தேர்வில் பங்கேற்பதற்காக 1,054 போட்டியாளர்கள் பதிவு செய்துள்ளனர். நான்கு அறைகளில் நடந்த தேர்வுகளில், முதல் நாளான நேற்று 680 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மீதமுள்ளோருக்கு இன்று(1ம் தேதி) தேர்வுகள் நடக்கின்றன. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த தேர்வுகளை, கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வரும், முதன்மை கண்காணிப்பாளருமான சாரதா தலைமையில், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர் சுப்பையா, கிறிஸ்டி ரோஸ்லின் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.