Sunday, May 28, 2023
Home » தடை வலையில் மீன் பிடித்ததால் அபராதம்; பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: விசைப்படகுகள் கரை நிறுத்தம்

தடை வலையில் மீன் பிடித்ததால் அபராதம்; பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: விசைப்படகுகள் கரை நிறுத்தம்

by kannappan

ராமேஸ்வரம்: அரசால் தடை செய்யப்பட்ட வலையினால் மீன் பிடித்த படகுகளுக்கு அபராதம் விதித்து, கடலுக்கு செல்ல தடை விதித்ததால் பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து விசைப்படகுகளில் மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் சிலர்,  இரட்டைமடி வலையினால் மீன் பிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் 40 விசைப்படகுகளுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்ததுடன், இப்படகுகள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கவும் தடை விதித்தனர். இதனால் அபராதம் விதிக்கப்பட்ட 40 படகுகளும் கடலுக்கு செல்லாத நிலையில், இவர்களுக்கு ஆதரவாக மற்ற மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் பாம்பனில் 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று கடலுக்கு செல்லாமல் கரை நிறுத்தப்பட்டிருந்தன. மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லாததால் நேற்று மீன்வரத்து இல்லாமல், பாம்பன் கடற்கரை ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது….

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi