பூந்தமல்லி: ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு இளைஞர்களை மூளை சலவை செய்து ஆட்களை சேர்ப்பதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு தகவல் வந்ததையடுத்து தீவிர விசாரித்தனர். இதில், தஞ்சாவூரைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட 4 பேரும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் அஜிஸ் அகமது என்பவர் கடந்த ஆண்டு என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ரகசியமாக மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பது, அவர்களுக்கு தீவிரமயமாக்கல், தேச விரோத சக்திகளிடமிருந்து ராணுவ உதவியுடன் இந்தியாவில் இஸ்லாமிய கலிபாவை நிறுவும் பணியையும் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அஜிஸ் அகமது மீது பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு என்ஐஏ அதிகாரிகள் நேற்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.