தஞ்சாவூர், ஆக.17: தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தேசியக் கொடியேற்றினார். 78ம் ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்கோட்டாட்சியர் இலக்கியா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் இளங்கோ, தலைமை உதவியாளர் தமிழரசி, அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் புதிதாக பயிற்சி பெற்று வரும் அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.