தஞ்சாவூர், நவ. 22: தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் 4-வது கேட் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஒருவர் பட்டாகத்தியை காட்டி மிரட்டுவதாக தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யாபிள்ளை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தஞ்சை கீழவாசல் பஞ்சவர்ணகாலனியை சேர்ந்த அர்ஜூன் மகன் ஹரிஹரன் (வயது 26) என்பதும், இவர் அந்த வழியாக சாலையில் சென்ற பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டாகத்தியை காட்டி மிரட்டி வந்ததும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.