தஞ்சாவூர், நவ. 30: தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சைக்கு மாநகருக்கு சுற்றுலா, கல்வி, மருத்துவம் உள்ளிட்டவைகளுக்காக ஏராளமானோர் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இவர்களில், பெரும்பாலானோர் தஞ்சை புதிய பஸ் நிலையம் வந்ேத, மற்ற இடங்களுக்கு பேருந்தில் செல்கின்றனர்.
வௌியூரிலிருந்து வருவோர், பஸ் நிலைய பகுதியிலுள்ளவர்கள் கழிவறையைப் பயன்படுத்தாமல், பேருந்து நிலைய பகுதியை கழிவறையாகப் பயன்படுத்துகின்றனர். இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. பேருந்து நிலையத்திலுள்ள கழிவறையை தூய்மையாகப் பராமரித்து, அவற்றை பொதுமக்கள் பயன்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.