தஞ்சாவூர் ஜூலை 1: தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியன் 16வது நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. துணைவேந்தர் குழு உறுப்பினர்கள் முனைவர் அமுதா, மரு. முனைவர் பாரதஜோதி தலைமை வகித்தார். பதிவாளர் (பொ) பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் மொழி பெயர்ப்புத்துறைத் தலைவர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் (பொ) முனைவர் முருகன், கண்காணிப்பாளர் முனைவர் பஞ்சநாதன், துறைத்தலைவர்கள், கல்வியாளர்கள், அலுவலர்கள், அலுவல் நிலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.