தஞ்சாவூர், ஜூன் 26: தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2024-2025ம் கல்வியாண்டிற்கான முதுநுண்கலை சிற்பம், முதுகலை இசை, முதுநுண்கலை நாடகம், முதுகலை கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல், ஒருங்கிணைந்த முதுகலை வரலாறு, இளங்கல்வியியல், முதுகலை தமிழ், ஒருங்கிணைந்த முதுகலைதமிழ், முதுகலை தமிழ், ஒருங்கிணைந்த முதுகலை தமிழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர்கள் அமுதா, பேரா. பாரதஜோதி அனுமதியுடன் பல்கலைக்கழகப் பதிவாளர் பன்னீர்செல்வம், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் துளசேந்திரன் ஆகியோரின் முன்னிலையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் மக்கள் தொடர்பு அலுவலர் (பொ) மொழி பெயர்ப்புத்துறை தலைவர் முருகன், தேர்வுப்பிரிவு கண்காணிப்பாளர் பஞ்சநாதன் ஆகியோர் உடனிருந்தனர். இத்தேர்வு முடிவுகளை தமிழ்ப் பல்கலைக்கழக <http://www.tamiluniversity.ac.in/> என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என பதிவாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.