தஞ்சாவூர், நவ. 13: மத்திய மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான சிறப்பு முகாம் தஞ்சையில் நடைபெற்றது.
இது குறித்து முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி கூறியதாவது:இந்திய அஞ்சல் துறை சார்பில் தஞ்சை தபால் கோட்டத்தில் கடந்த 6, 7, 8 ஆகிய தேதிகளில் அரசு ஐ.டி.ஐ விளையாட்டு மைதானம் மற்றும் ராஜா சரபோஜி கல்லூரி விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமான ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கு தஞ்சை தபால் கோட்டத்தில் உள்ள தபால் நிலைய ங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், நேரில் சென்று உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க இயலாத ஓய்வூதியதாரர்கள் தங்கள் வீட்டு வாசலிலேயே பயோமெட்ரிக், பேஸ் ரெகக்னேசன் முறையை பயன்படுத்தி தபால்காரர் வாயிலாக டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்துக் கொள்ளலாம்.டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் பெறுவதற்கு ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆதார் எண், மொபைல் எண்,பி.பி.ஓ எண். மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்கள் ஆகிய வற்றை தெரிவிக்க வேண்டும் மேலும் இந்த சேவையை பெறுவதற்கு \”http://ccc.cept- gov.in/covid/request.aspx- gt;service request-gt;IPPBjeevan Pramaan என்ற இணையதள வழியாகவும், 8904893642 என்ற வாட்ஸ்-அப் எண் வழியாகவும் வீட்டில் இருந்தபடியே பயன்படுத்தி கோரிக்கை கொடுத்தால் உங்கள் பகுதி தபால்காரர் உங்களை தேடி வந்து உங்கள் தேவையை பூர்த்தி தருவார்கள்.
எனவே மத்திய மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் ராணுவத்தினர் தபால் நிலையத்தில் உள்ள இந்த வசதிகளை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்பித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.