தஞ்சாவூர், ஆக. 15: தமிழகத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தக்காளி, வெங்காயம், பூண்டு விலை அடிக்கடி உயர்ந்து இல்லத்தரசிகளை மிரட்டி வருகிறது. அதேபோல், பச்சைக் காய்கறிகளும், கேரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளும் அடிக்கடி உயர்ந்து மக்களை கஷ்ட்டப்படுத்தி வருகின்றன. தஞ்சாவூர் காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு தொடர்ந்து கேரட் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை படிப்படியாக உயர்ந்து நேற்று 100 ரூபாய்க்கு விற்றது. ஊட்டி, மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து 2 டன் வரை வரும் கேரட், அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று குறைவாக வந்தது. இதனால், கேரட் விற்பனை விலையும் அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.