தஞ்சாவூர், மே.28: தஞ்சாவூர் மாவட்ட காவல் துறையில் முதிரா மற்றும் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட 60 காவல் வாகனங்களை பொது ஏலத்தில் ஏலமிட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் உத்தாவிடப்பட்டுள்ளார்.இந்த பொது ஏலமானது வருகின்ற 04.06.2025 அன்று காலை 10.00-மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம் பழைய கோர்ட் ரோடு, ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலத்திற்குண்டான காவல் வாகனங்கள் மேற்படி ஆயுதப்படை மைதானத்தில் 02.06.2025 அன்று காலை 09.00-மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பார்வைக்காக வைக்கப்படும். ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஆதார் அட்டை அசலுடன் நகல் ஒன்றை கொடுத்து 04.06.2025 அன்று காலை 07.00-மணி முதல் 10.00-மணி வரை ரூ.1000 ம் முன் வைப்பு தொகையாக செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் ஏலம் எடுத்தவர்கள், ஏலத்தொகையுடன் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஏலத்தொகை மற்றும் GST (இருசக்கர வாகனம்-12%, நான்கு சக்கர வாகனம்-18%) வரியுடன் சேர்த்து 04.06.2025 அன்று உடனே செலுத்திவிட வேண்டும் இந்த அறிவிப்பின் முலம் தெரிவித்துள்ளார்.