தஞ்சாவூர் ஆக.21: தஞ்சை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழாவையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 80-வது பிறந்தநாள் விழாவை பல்வேறு இடங்களில் காங்கிரசார் கொண்டாடினர். அதில், தஞ்சை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பழைய பஸ் நிலையம் அருகில் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதற்கு, மாநகர் மாவட்ட தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவரும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான நாஞ்சி கி. வரதராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வயலூர் ராமநாதன், ஜேம்ஸ் , பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், ராஜீவ் காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில், நிர்வாகிகள் லட்சுமி நாராயணன், செந்தில் சிவகுமார், ரயில்வே தொழிற்சங்கம் அசோக் ராஜன், சிடிசியூ சந்திரசேகரன், சேவாதளம் திருஞானம், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சாந்தா ராமதாஸ், எஸ்.சி/எஸ்.டி பிரிவு திட்டை தியாகராஜன், கரந்தை கண்ணன், அடைக்கலசாமி, மதகை இருதயம், சூசை மாணிக்கம், நாராயணன், நாஞ்சிக்கோட்டை செல்வம் என்கிற வீரராகவன், இயேசு, வல்லம் கௌரிசங்கர், விசிறி சாமியார் முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.