தஞ்சாவூர், ஜூன் 25: காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம். பாரதிய மஸ்தூர் சங்கத்தின் பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று தஞ்சையில் நடைபெற்றது. இதற்கு மாநிலத் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர்கள் ராஜகோபால், ராமதாஸ், பழனி, மாநில செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் சுரேஷ் வரவேற்புரை ஆற்றினார். மாநில பொதுச் செயலாளர் கோபு வேலை அறிக்கை வாசித்தார். மாவட்ட தலைவர் சுரேஷ் வரவேற்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு மாநில பாரதிய மஸ்தூர் சங்க பொது செயலாளர் சங்கர் சிறப்புரையாற்றினார். மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் நிறைவுரையாற்றினார். இந்த கூட்டத்தில், 22 ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், பணிவரன்முறை, பணி நிரந்தரம் போன்ற நியாயமானக் கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்திட வேண்டும்.
எண்ட் டூ எண்ட் பரிவர்த்தனையில் விற்பனை செய்யும்போது கருவிகள் தரமற்றதாக இருப்பதால் அதில் ஏற்படும் தவறுகளுக்கு ஊழியர்களை பலிகடா ஆக்க கூடாது. ஊழியர்களுக்கு ரூ.2000 சம்பளம் உயர்த்தியது உடனே அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் மாவட்ட செயலாளர். பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.