தஞ்சாவூர், ஆக.25: தஞ்சாவூரில் மாவட்ட அளவிலான கராத்தே வீரர்களுக்கு இடையேயான கலர் பெல்ட் மற்றும் கருப்பு பெல்டுக்கான தகுதி போட்டி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஷிங்டேரியு கும்பு கராத்தே கழகத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இடையேயான கலர் பெல்ட் மற்றும் கருப்பு பெல்ட் காண தேர்வு போட்டி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் கராத்தே கட்டாக் சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர். இப்போட்டியில் தஞ்சையை சேர்ந்த கபிலன் மற்றும் சாய் பிரீத்தி ஆகியோர் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு சிறப்பாக செய்து பிளாக் பெல்ட் தகுதி பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாஸ்டர்கள் சென்சாய் மதுசூதனன், சென்சார் ராம்குமார், சென்சாய் விஷ்ணு பிரகாஷ், ஆனந்தகுமார், ஜெயப்பிரியன் ஆகியோர் செய்திருந்தனர்.