தஞ்சாவூர், செப்.2: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வார்டுகளில் உள்ள கழிவறைகளில் கதவுகள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். கழிவறைகளில் கதவு இல்லாத வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திருச்சி ,அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் ,நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு நோயாளிகள் சிகிச்சைக்காக வரும் நிலையில் அங்கு இருக்கும் பல்வேறு கழிவறைகளில் உள்நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் பயன்படுத்தக்கூடிய கழிவறைகளில் கதவுகள் இல்லாததால் முக சுழிப்புடன் செல்ல வேண்டிய சூழ்நிலை கழிவறையில் மற்றும் குளியல் அறைகளும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் நோய்களுக்கு மேலும் நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதால் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள வார்டுகளில் உள்ள கழிவறைகளில் கதவுகள் இல்லாத வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.