திருவையாறு, செப். 2: திருவையாறு அடுத்த கடுவெளி கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் வேளாண் துறை அலுவலர்களுக்கு வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து விஞ்ஞானிகள் இலை சுருட்டு புழு மற்றும் புகையான் கட்டுப்பாட்டு முறைகள் பற்றி பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அளித்தனர். இதில் காட்டுத்தோட்டம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து தலைவர் மற்றும் பேராசிரியர் ராமநாதன், தாவர இனப்பெருக்க துறையின் உதவி பேராசிரியர் அரிராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வேளாண்மை துறையின் களப் பணியாளர்களான வேளாண் அலுவலர், துணை வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர்களுக்கு அட்மா திட்டத்தின் மூலம் பயிற்சி அளித்தனர். இதில் துணை வேளாண் அலுவலர் கோவிந்தராஜன், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயபிரபா, உதவி வேளாண் அலுவலர்கள் உமாபிரியா, இளந்திரையன், கவிதா, ஐஸ்வர்யா, வெங்கடேசன், அகிலா, சாந்தகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.