வல்லம், மே. 31: மணல் கடத்தி வந்த டாரஸ் லாரியை போலீசார் பறிமுதல் செய்து போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
தஞ்சை பகுதியில் மணல் கடத்தப்படுவதாக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை உதவி இயக்குனர் பிரியா வல்லம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் வல்லம் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் பணி ஈடுபட்டனர். அப்போது வல்லம் அருகே திருச்சி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த டாரஸ் லாரியை போலீசார் தடுத்து நிறுத்தினர். சோதனையில், 6 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து வல்லம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாரஸ் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக லால்குடி அன்பில், மங்கம்மாள்புரம் பகுதியை சேர்ந்த கோதண்டபாணி என்பவரின் மகன் மணிகண்டன் (42) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.