ஒரத்தநாடு, ஜூலை 4: ஆபத்தான நிலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தை சீரமைக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்திற்குட்பட்ட மேல வன்னிப்பட்டு கிராமத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் மேற்கூரை மற்றும் கட்டிட பகுதிகள் சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. பொதுமக்கள் பேருந்துக்கு காத்திருக்கும் போது அபாய சம்பவம் நிகழ வாய்ப்புள்ளது.